‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமி‌ஷன் எச்சரித்து விடுவித்தது

‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமி‌ஷன் எச்சரித்து விடுவித்தது
x
தினத்தந்தி 18 April 2019 11:05 PM IST (Updated: 18 April 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமி‌ஷன் எச்சரித்து விடுவித்தது

புதுடெல்லி, 

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, கடந்த 3–ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, ‘மோடியின் ராணுவம்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்.

இதுதொடர்பாக அவருக்கு மாநில தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதை நக்வி ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், அவரை தலைமை தேர்தல் கமி‌ஷன் எச்சரித்து விடுவித்துள்ளது. அந்த உத்தரவில் தேர்தல் கமி‌ஷன் கூறியிருப்பதாவது:–

ராணுவம் தொடர்பாக தேர்தல் பிரசாரங்களில் பேசுவதை தவிர்க்குமாறு ஏற்கனவே கூறி இருந்தோம். அதையும் மீறி அப்படி பேசிய முக்தார் அப்பாஸ் நக்வியை எச்சரிக்கிறோம். எதிர்காலத்தில், அரசியல் பிரசாரத்துக்கு ராணுவத்தை பயன்படுத்தாமல் கவனமாக இருக்குமாறு அவரை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story