என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை: மனைவியிடம் போலீசார் விசாரணை
என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை செய்யப்பட்டதாக பிரதேச பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோகித் சேகர் திவாரி (வயது 40) டெல்லியில் வசித்து வந்தார். ரோகித் சேகர் திவாரி அவருடைய வீட்டில் மூக்கில் ரத்தம் வடிய 16-ந் தேதி மயங்கி கிடந்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருடைய உடல் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், ரோகித் சேகர் திவாரி கழுத்து நெரிக்கப்பட்டதும், அவர் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது.
Late UP and Uttarakhand CM ND Tiwari's son Rohit Shekhar Tiwari's death case: Delhi crime branch is questioning the wife of Rohit Shekhar Tiwari (in file pic) #Delhipic.twitter.com/aIrtAGLU1o
— ANI (@ANI) April 20, 2019
அவருடைய மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரோகித் சேகர் திவாரி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரோகித் சேகர் திவாரியின் மனைவியிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story