வீட்டு வாசலில் உறங்கிய குழந்தை உள்பட 3 பேர் யானை மிதித்து பலி


வீட்டு வாசலில் உறங்கிய குழந்தை உள்பட 3 பேர் யானை மிதித்து பலி
x
தினத்தந்தி 20 April 2019 11:14 AM IST (Updated: 20 April 2019 11:46 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வாசலில் படுத்து உறங்கிய குழந்தை உள்பட 3 பேர் யானை மிதித்து பலியானார்கள்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ஆங்குல் மாவட்டத்தில் மதம் பிடித்த யானை தாக்கியதில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

வெறிபிடித்து ஓடிய அந்த யானை வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை மிதித்துக் கொன்றது. இதில்  குழந்தை  மற்றும்  2 பேர் பலியானர்கள்.  அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றினர்.

இதே யானை ஏற்கனவே ஒருவரை கொன்ற நிலையில், மேலும் ஒரு பெண்ணை அடித்துக் கொன்றதால் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்தது. வனத்துறை அதிகாரிகள் ஒருவழியாக அந்த யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 5 பேரை யானை மிதித்துக் கொன்ற சம்பவம், யானைகள் அதிகமாக நடமாடும் ஒடிசா கிராமங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story