அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது - இந்திய விமானப்படை பரிந்துரை
வீர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தனின் பெயரை இந்திய விமானப்படை பரிந்துரை செய்துள்ளது. #AbhinandanVarthaman #IndianAirForce #VirChakraAward
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா-பாகிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள பாலோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவப் படை தாக்குதலை நடத்தியது.
அப்போது பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை மிக்-21 விரட்டி சென்று சுட்டு வீழ்த்திய போது பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இந்தியாவின் தொடர் முயற்சிகள் காரணமாக பாகிஸ்தான் அவரை இரண்டு நாட்களுக்கு பிறகு விடுவித்தது. தொடர்ந்து அவர் விடுமுறையில் இருந்து வந்த நிலையில் அவருக்கு பணி உத்தரவு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் காலத்தில் சிறப்பான பணிக்காக வழங்கப்படும் வீர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானின் பெயரை இந்திய விமானப் படை பரிந்துரை செய்துள்ளது.

Related Tags :
Next Story