இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் : அதிர்ச்சி தரும் முகநூல் பதிவுகள்
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் ரியாஸ் அபுபக்கர் முகநூல் பதிவுகள் அதிர்ச்சி தருவதாக உள்ளன.
திருவனந்தபுரம்
இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என கேரளாவை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் கைதுசெய்யப்பட்டார். அவர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தி ஆஜர் படுத்தப்பட்டு 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். ரியாஸ் அபுபக்கர் முகநூல் பதிவுகள் சில அதிர்ச்சி தருவதாக உள்ளன.
தமிழ் வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளது. ஆப்கன், சிரியா குறித்த வாசகங்களை பதிவு செய்துள்ள அவர், இஸ்லாம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும், இஸ்லாமியர்களை கொலை செய்யலாம் ஆனால், இஸ்லாமை கொலை செய்ய முடியாது உள்ளிட்ட வாசகங்களையும் பதிவிட்டுள்ளார். இவ்வாறு ஏராளமான படங்களையும் அதோடு தன் மனதில் இருக்கும் கருத்துக்களை மேம்போக்காக சொல்லும் வாசகங்களையும் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story