2014 முதல் 942 குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன, பிரதமர் காது கொடுத்து கேட்க வேண்டும் -ராகுல்காந்தி


2014 முதல் 942 குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன, பிரதமர் காது கொடுத்து கேட்க வேண்டும் -ராகுல்காந்தி
x
தினத்தந்தி 2 May 2019 1:13 PM IST (Updated: 2 May 2019 1:13 PM IST)
t-max-icont-min-icon

பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 942 முறை குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi | #PMModi

புதுடெல்லி

பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் வெடிகுண்டுகள் சத்தம் எதுவும் கேட்கவில்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில், புல்வாமா, பதன்கோட், உரி, கட்ச்ரோலி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என 942 முறை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது என்றும், இதை பிரதமர் காது கொடுத்து கேட்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் நேற்று நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 16 பேர் உயிரிழந்த நிலையில், ராகுல் காந்தி இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.


Next Story