பின்லேடன் படத்துடன் கேரளாவில் சுற்றிய கார்


பின்லேடன் படத்துடன் கேரளாவில் சுற்றிய கார்
x
தினத்தந்தி 4 May 2019 8:00 PM GMT (Updated: 5 May 2019 12:15 AM GMT)

பின்லேடன் படத்துடன் கேரளாவில் கார் ஒன்று சுற்றி திரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொல்லம்,

இலங்கையை தொடர்ந்து கேரளாவிலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இந்நிலையில் கொல்லம் நகரில் ஒரு காரில் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் படம் ஒட்டியபடி சுற்றி வந்தது. இதை கண்ட ஒருவர் அதை தன் செல்போனில் படம் பிடித்து போலீசுக்கு அனுப்பினார். இதனால் உஷாரான போலீசார் அந்த காரை தேடி பிடித்து பறிமுதல் செய்தனர். மேற்கு வங்காள பதிவெண்ணுடன் இருந்த அந்த காரை ஓட்டியவர் வாடகை கார் டிரைவர் என தெரியவந்தது. இதையடுத்து கார் உரிமையாளர் நாசரை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னுடைய காரில் சில நாட்களுக்கு முன்பு தான் ஒசாமா பின்லேடன் படத்தை ஒட்டியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை ஜாமீனில் போலீசார் அனுப்பிவிட்டு மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story