வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசிய சீதாராம் யெச்சூரி மீது போலீசில் புகார்
வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசிய சீதாராம் யெச்சூரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
டேராடூன்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்துக்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்று பேசினார். ஆனால் அவரது பேச்சுக்கு பதில் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘‘இந்து புராண நூல்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் வன்முறை சம்பவங்கள் நிறைந்துள்ளன. எனவே இந்துக்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்பது தவறான வாதம்’’ என்றார்.
சீதாராம் யெச்சூரியின் இந்த கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டது, இந்து மதத்தின் புகழை அவர் கெடுக்க நினைக்கிறார் என்று யோகா குரு ராம்தேவ் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவார் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து யெச்சூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story