தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சம் மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது - ப.சிதம்பரம் டுவீட்


தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சம் மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது - ப.சிதம்பரம் டுவீட்
x
தினத்தந்தி 5 May 2019 2:33 PM IST (Updated: 5 May 2019 2:33 PM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் தோல்வி உறுதி என்ற அச்சம் மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எழுப்பி உள்ள கேள்வியில்,

போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறவே ஆதாரமற்றவை என்று டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது பிரதமர் மோடிக்குத் தெரியாதா? 

இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அன்றைய பாஜக அரசு முடிவெடுத்தது திரு மோடி அவர்களுக்குத் தெரியாதா? இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்ற முதுமொழி பிரதமர் மோடிக்குத் தெரியாதா? 

தேர்தலில் தம்முடைய கட்சியின் தோல்வி உறுதி என்ற அச்சம் திரு மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Next Story