சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. #CBSEResults
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிப்ரவரி 2ந்தேதி முதல் மார்ச் 29ந்தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 27 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
cbseresults.nic.in மற்றும் cbse.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story