அமேதியில் காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதை ராகுல் காந்தி ஆதரிக்கிறார் -ஸ்மிரிதி இரானி


அமேதியில் காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதை ராகுல் காந்தி ஆதரிக்கிறார் -ஸ்மிரிதி இரானி
x
தினத்தந்தி 6 May 2019 9:46 AM GMT (Updated: 6 May 2019 9:46 AM GMT)

காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதை ராகுல்காந்தி ஆதரிக்கிறார் என்று ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

அமேதி,

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி துவங்கி 7 கட்டமாக  பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்று முக்கிய  தொகுதிகளாக கருதப்படும் அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல்வேறு  தொகுதிகளுக்கு 5-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் மத்திய மந்திரியும், பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான ஸ்மிரிதி இரானி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் வாக்குச்சாவடிக்குள் 75 வயதுடைய பெண் வாக்காளரிடம் அங்கிருந்த தலைமை அதிகாரி ஒருவர், காங்கிரஸ் சின்னம் இருக்கும் இடத்தில் விரலை வைத்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியதாக அந்த  வாக்காளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

இதனை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தை உஷார் படுத்த எனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக  நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என கூறி உள்ளார்.  காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதை ராகுல் காந்தி ஆதரிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story