தடையை மீறி சிவப்பு சுழல் விளக்கை காரில் பொருத்திச்சென்ற 6 வாலிபர்கள் கைது


தடையை மீறி சிவப்பு சுழல் விளக்கை காரில் பொருத்திச்சென்ற 6 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 8 May 2019 2:30 AM IST (Updated: 8 May 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி சிவப்பு சுழல் விளக்கை காரில் பொருத்திச்சென்ற 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நொய்டா,

ஆட்சி, அரசு பதவியில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய கார்களில் பவனி வந்தது உண்டு.

இப்படி சிவப்பு சுழல் விளக்குகளை காரில் பொருத்துவதற்கு நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு மே மாதம் தடை விதிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், அரியானா மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் 6 வாலிபர்கள் ஒரு திருமண விழாவில் பந்தாவாக கலந்து கொள்ள நினைத்து சிவப்பு விளக்கை காரில் பொருத்தி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் பயணம் செய்தனர்.

ஒரு இடத்தில் அவர்கள் காரை நிறுத்தி செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த கிரேட்டர் நொய்டா போலீசார், அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Next Story