ஒடிசாவில் 3 பெண் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
ஒடிசாவில் கோராபுட் பகுதியில் 3 பெண் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தின் நந்தபூர் தொகுதியில் ஹதிபாரி பஞ்சாயத்து உள்ளது. இதன் எல்லையில் கிட்டுவாகந்தி என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்தனின் பேரில் சென்ற சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG), கோராபுத் காவல்துறையின் மாவட்ட தன்னார்வ படை (DVF) ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் 2 பெண்கள் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story