முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் மருமகன் பா.ஜனதாவில் சேர்ந்தார்


முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் மருமகன் பா.ஜனதாவில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 9 May 2019 10:52 PM IST (Updated: 9 May 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்கின் மருமகன் ஸ்வரண் சிங் சான்னி மத்திய மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்.

புதுடெல்லி, 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்கின் மருமகன் ஸ்வரண் சிங் சான்னி மத்திய மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். அவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு முக்கிய அரசு பதவிகளை வகித்துள்ளார்.

இறுதியாக, பஞ்சாப் மாநிலத்தின் தலைமை தகவல் ஆணையராக பணியாற்றிய நிலையில், கடந்த 3–ந் தேதி ஓய்வுபெற்றார்.

Next Story