நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ‘ஒரு பிரதமரை இழிவுபடுத்துவது கோழைத்தனம்’ மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு


நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ‘ஒரு பிரதமரை இழிவுபடுத்துவது கோழைத்தனம்’ மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு
x
தினத்தந்தி 9 May 2019 11:26 PM IST (Updated: 9 May 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கடந்த சில நாட்களாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கடந்த சில நாட்களாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராஜீவ் காந்தியின் வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதி என்ற நிலையில் முடிந்தது என ஏற்கனவே கூறியிருந்த மோடி, ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை ராஜீவ் காந்தி தனது சொந்த டாக்சி போல பயன்படுத்தினார் என்று சமீபத்திலும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘வெறுப்புணர்வுக்கு ராஜீவ் காந்தி தனது உயிரை பலிகொடுத்தார். நாட்டுக்காக உயிர்நீத்த ஒரு பிரதமரை இழிவுபடுத்துவது உச்சபட்ச கோழைத்தனம்’ என்று தெரிவித்து உள்ளார்.

எனினும் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பி இருந்த அகமது படேல், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தும், அன்றைய பா.ஜனதா ஆதரவு பெற்ற வி.பி.சிங் அரசு ராஜீவ் காந்திக்கு போதிய பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

Next Story