தேர்தல் செய்திகள்

பிரதமர் மோடி இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்- டைம்ஸ் இதழ் கட்டுரை + "||" + TIME magazine cover features PM Modi with controversial headline ‘India’s divider in chief’

பிரதமர் மோடி இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்- டைம்ஸ் இதழ் கட்டுரை

பிரதமர் மோடி இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்- டைம்ஸ் இதழ் கட்டுரை
இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர் என பிரதமர் மோடிக்கு பெயர் சூட்டி அமெரிக்க டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும்  "டைம்ஸ் இதழ்"  2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ளது .  2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தியது. இந்நிலையில்  தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை சாடி கட்டுரை வெளியிட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் படத்தை அட்டைப்படமாக வடிவமைத்து  "இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்" என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டுள்ளது.  இது மே 20-ம் தேதி வரையிலான பதிப்பில் வெளியானது. "இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்" என்ற தலைப்புடன் இதழின் அட்டைப்படத்தில் பிரதமர் மோடி இடம் பிடித்திருந்தார். அதாவது ஜனநாயக நாடான இந்தியா, பிரதமர் மோடி அரசாங்கத்தில், மதங்களால் பிரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டு இந்தக்கட்டுரை வெளியாகியுள்ளது.

ஆதீஷ் தஸீர் என்பவர் எழுதியுள்ள இந்த கட்டுரையில், இந்தியாவின் மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மோடியின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக்கட்டுரை குஜராத் கலவரத்தையும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் குறிப்பிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை மாமல்லபுரத்தில் கலெக்டர் ஆய்வு
பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.
2. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
3. சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருகிறது - பிரதமர் மோடி
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
4. பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி மலர்க்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
இந்தியா , பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.