ரபேல் மறு சீராய்வு வழக்கில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்


ரபேல் மறு சீராய்வு வழக்கில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 10 May 2019 4:50 PM IST (Updated: 10 May 2019 4:50 PM IST)
t-max-icont-min-icon

ரபேல் மறு சீராய்வு வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

ரபேல் மறு சீராய்வு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கை தொடர்ந்த பிரசாந்த் பூஷண், வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து, இது குறித்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், 

தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் விவரங்களை வெளியிடுவது சரியாக இருக்காது. கொள்முதல் விலை தொடர்பான விவரங்களை சிஏஜி சரிபார்த்து விட்டதால் தாக்கல் செய்யத்தேவையில்லை. இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Next Story