தேசிய செய்திகள்

துண்டு பிரசுரம் விவகாரம்: குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் - கவுதம் கம்பீர் + "||" + Will hang myself in public if Arvind Kejriwal proves charges says Gautam Gambhir on pamphlet row

துண்டு பிரசுரம் விவகாரம்: குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் - கவுதம் கம்பீர்

துண்டு பிரசுரம் விவகாரம்: குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் - கவுதம் கம்பீர்
துண்டு பிரசுரம் விவகாரம் குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
கிழக்கு டெல்லி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், ஆம் ஆத்மி வேட்பாளராக அடிஷியும் போட்டியிடுகிறார்கள். 12–ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 

இந்நிலையில், அடிஷியை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்கள், சில அடுக்குமாடி குடியிருப்புகளில் செய்தித்தாள்களுடன் இணைத்து வினியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லி துணை முதல்–மந்திரி சிசோடியாவுடன் இணைந்து அடிஷி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கதறி அழுதார். கவுதம் கம்பீர்தான் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அதற்கு கவுதம் கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார். இச்செயலில், தான் ஈடுபட்டதாக நிரூபித்தால், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையே இருதரப்பு இடையேயும் அவதூறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரம் விவகாரத்தில் எனக்கு தொடர்பு என்ற குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயார், அப்படி நிரூபிக்கவில்லை என்றால் அவர் அரசியலைவிட்டு விலக தயாரா? என கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்குவங்காள மாநிலத்தில் வன்முறை நடந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் : தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா மனு
மேற்குவங்காள மாநிலத்தில் வன்முறை நடந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் பா.ஜனதா மனு கொடுத்துள்ளது.
2. கருத்துக்கணிப்பு தகவலால் பா.ஜனதாவினர் மகிழ்ச்சி, மே 23-க்கு காத்திருக்கும் காங்கிரஸ்
கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜனதாவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகும் வரையில் காத்திருக்கலாம் என காங்கிரஸ் கூறுகிறது.
3. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு என்பது தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
4. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் கடும் போட்டியிருக்கும் என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்
மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் எனவும், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகள் வரையில் கிடைக்கும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.