நாடாளுமன்றத்துக்கு 6-வது கட்ட தேர்தல் பீகார், அரியானா, டெல்லி உள்பட 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது
நாடாளுமன்றத்துக்கு 6-வது கட்டமாக பீகார், அரியானா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இந்த தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6 என 5 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இன்றி 5 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.
இந்த நிலையில் 6-வது கட்டமாக உத்தரபிரதேசத்தில் 14, பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தலா 8, அரியானாவில் 10, டெல்லியில் 7, ஜார்கண்ட்டில் 4 என மொத்தம் 59 தொகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தல் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு முக்கியமான தேர்தல் ஆகும். இந்த 59 தொகுதிகளில் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 44 இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெற்றன.
இந்த முறை பாரதீய ஜனதா கட்சி கடுமையான போட்டியினை உத்தரபிரதேச மாநிலத்தில் சந்திக்கிறது. அங்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி கடுமையான சவாலாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அதன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை தீவிர பிரசாரத்தில் களம் இறக்கி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி கண்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியாக உள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
டெல்லியில் 7 தொகுதிகளை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மத்திய மந்திரி மேனகா காந்தி (சுல்தான்பூர்-பா.ஜனதா), சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் (அசம்கார்), அரியானாவில் முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா மகன் தீபேந்தர் சிங் ஹூடா (ரோட்டக்-காங்கிரஸ்), மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் (போபால்), பாரதீய ஜனதா மூத்த தலைவர் பிரக்யா சிங் தாக்குர் (போபால்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (குணா-காங்கிரஸ்), ஜார்கண்டில் முன்னாள் முதல்-மந்திரி மதுகோடா மனைவி கீதா கோடா (சிங்பும்-காங்கிரஸ்), முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் (தன்பாத்), பீகாரில் ராஷ்டிர ஜனதாதள மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் (வைஷாலி), மத்திய மந்திரி ராதாமோகன்சிங் (பூர்வி சம்பரன்-பா.ஜனதா), மேற்கு வங்காளத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்திரகுமார் போஸ் (கொல்கத்தா தெற்கு-பா.ஜனதா) ஆகியோர் நாளை தேர்தலை சந்திக்கிற முக்கிய தலைவர்கள் ஆவர்.
டெல்லியில் மத்திய மந்திரி ஹர்சவர்த்தன் (சாந்தினி சவுக்-பா.ஜனதா) முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் (வடகிழக்கு டெல்லி-காங்கிரஸ்), முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் (கிழக்கு டெல்லி-பா.ஜனதா), மீனாட்சி லேகி (பா.ஜனதா- புதுடெல்லி), அஜய் மக்கான் (காங்கிரஸ்- புதுடெல்லி), குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் (தெற்கு டெல்லி-காங்கிரஸ்) ஆகியோரும் நாளை தேர்தலை எதிர்கொள்கிற முக்கிய தலைவர்கள் வரிசையில் இடம் பெறுகின்றனர். மொத்தம் 979 வேட்பாளர் கள் களத்தில் இருக்கின்றனர்.
நாளை தேர்தலை சந்திக்கிற 59 தொகுதிகளிலும் பிரசாரத்தில் அனல் பறந்தது.
பாரதீய ஜனதா கட்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமித் ஷா, காங்கிரசுக்காக அதன் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, திரிணாமுல் காங்கிரசுக்காக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கி இடைவெளியின்றி நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக 7-வது கட்ட தேர்தல் 19-ந் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிற வாரணாசி தொகுதியும் இவற்றில் அடங்கும்.
7 கட்ட தேர்தல்கள் முடிந்து ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடைபெறுகிறது.

Related Tags :
Next Story