அமெரிக்காவில் தயாரான அதிநவீன ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு


அமெரிக்காவில் தயாரான அதிநவீன ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 May 2019 12:16 PM IST (Updated: 11 May 2019 12:16 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவிடம் இருந்து 22 அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் படி, அரிசோனாவில் போயிங் உற்பத்தி ஆலையில் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முழுவதும் முடிவடைந்ததை அடுத்து, ஒரே ஒரு ஹெலிகாப்டர் மட்டும் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை, அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் இருந்து, ஏர் மார்ஷல் புட்டோலா பெற்றுக் கொண்டார்.

முதல் கட்டமாக சில ஹெலிகாப்டர்கள், ஜூலை மாதத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த ரக ஹெலிகாப்டர்களை இயக்குவது தொடர்பாக, தேர்வு செய்யப்பட்ட விமானப் படை குழு ஒன்று, அலபாமாவில் உள்ள அந்நாட்டு ராணுவத் தளத்தில் பயிற்சி எடுத்து வருகிறது. இந்திய விமானப்படையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஹெலிகாப்டரில் தொழில் நுட்பம் இருப்பதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், முதல் ஹெலிகாப்டரை அமெரிக்கா வழங்கியுள்ளது

அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரில் இரண்டு வீரர்கள் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 10 ஆயிரத்து 433 கிலோ எடையையும் தாங்கும். மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது.

Next Story