டெல்லியில் நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில் இயக்கம்
டெல்லியில் நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6 என 5 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இன்றி 5 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.
இந்த நிலையில் 6-வது கட்டமாக உத்தரபிரதேசத்தில் 14, பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தலா 8, அரியானாவில் 10, டெல்லியில் 7, ஜார்கண்ட்டில் 4 என மொத்தம் 59 தொகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் நாளை (12-ம்தேதி) நடக்கும் ஓட்டுப்பதிவை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்றும், வாக்குப்பதிவை அதிகப்படுத்தும் வகையில் அதிகாலை முதல் இயக்கப்படுவதாக மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story