இந்தியாவில் முதன் முறையாக ஒரு பகுதியை சொந்தம் கொண்டாடிய ஐஎஸ் அமைப்பு?
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு முதன் முறையாக இந்தியாவில் உள்ள ஒரு பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து, ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான Amaq News Agency -யில் ஐஎஸ் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதில், விலயாஹ் ஆஃப் ஹிண்ட் (Wilayah of Hind) என்ற பகுதியை தங்களுடைய புதிய மாகாணமாக ஐஎஸ் அறிவித்திருந்தது.
சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் இஷ்ஃபக் அகமது சோபி என்பவர் கொல்லப்பட்டதாகவும் ஐஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story