நேபாளத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 12 இந்தியர்கள் கைது


நேபாளத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 12 இந்தியர்கள் கைது
x
தினத்தந்தி 13 May 2019 1:30 AM IST (Updated: 13 May 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

நேபாளத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 12 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

காத்மாண்டு,

நேபாளத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதுடன், அந்நாட்டு மக்களை ஏமாற்றிய 12 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 12 பேரும் உத்தரபிர தேசத்தை சேர்ந்தவர்கள்.

சட்டரீதியான வழியில் அல்லாமல், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வர்த்தகத்தை அவர்கள் தொடங்கினர். நேபாளத்தில் இத்தகைய வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்தின் பெயரில், நேபாளத்தில் பலரது பணத்தையும் சுரண்டி உள்ளனர்.

காத்மாண்டுவில் ஒரு ஓட்டலில் பயிற்சி முகாம் என்ற பெயரில் ஒரு கூட்டம் நடத்தினர். அதில், நேபாளத்தை சேர்ந்த சுமார் 300 பேர் பங்கேற்றனர். ஆளுக்கு 1,250 டாலர் முதலீடு செய்தால், பலமடங்கு பணம் திரும்பக் கிடைக்கும் என்று அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டினர். அப்போது போலீசார் உள்ளே புகுந்து 12 பேரையும் கைது செய்தனர்.


Next Story