மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பேரணிக்காக வைத்திருந்த போஸ்டர்கள் மற்றும் கொடிகள் சேதம்


மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பேரணிக்காக வைத்திருந்த போஸ்டர்கள் மற்றும் கொடிகள் சேதம்
x
தினத்தந்தி 14 May 2019 5:00 PM IST (Updated: 14 May 2019 5:00 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பேரணி நடைபெறுவதற்கு முன் போஸ்டர்கள் மற்றும் கொடிகள் கிழித்து எறியப்பட்டு உள்ளன என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான 19ந்தேதி, 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அவற்றில் ஜாதவ்பூர் உள்பட 3 தொகுதிகளில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற இருந்தது.

ஆனால், ஜாதவ்பூர் கூட்டத்துக்கு கடைசி நேரத்தில் மேற்கு வங்காள மாநில அரசு அனுமதி மறுத்து விட்டது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று பேரணியில் கலந்து கொள்ள இருந்த நிலையில், அங்கு அவரை வரவேற்கும் வகையில் அக்கட்சியின் போஸ்டர்கள் மற்றும் கொடிகள் பல இடங்களில் கட்டப்பட்டு இருந்தன.

ஆனால் அவர் வருவதற்கு முன் அவை கிழிக்கப்பட்டும், தூக்கி வீசப்பட்டும் கிடந்துள்ளன.  இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறும்பொழுது, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தாஜியின் தொண்டர்கள் மற்றும் போலீசார் அனைத்து போஸ்டர்களையும் மற்றும் கொடிகளையும் கிழித்தெறிந்து உள்ளனர்.  நாங்கள் இங்கு வருவதற்கு முன் அவர்கள் தப்பியோடி விட்டனர் என கூறினார்.

Next Story