தலைக்கு ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது
தலைக்கு ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி ஸ்ரீநகர் அருகே கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீநகர்,
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமதுவை சேர்ந்தவன் அப்துல் மஜீத் பாபா. இவன், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவன். இவன் தலைக்கு ரூ.2 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே சவுரா என்ற இடத்தில் பாபா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், டெல்லி தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். காஷ்மீர் போலீசாரின் ஒத்துழைப்புடன் சோதனை நடத்தி பாபாவை பிடித்தனர். அவனை டெல்லிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு, டெல்லியில் நடந்த துப்பாக்கி சண்டையில் போலீசிடம் சிக்காமல் தப்பியவன் பாபா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story