வங்கிக்கடன் மோசடி: கொல்கத்தா நிறுவனத்தின் ரூ.483 கோடி சொத்துகள் முடக்கம்


வங்கிக்கடன் மோசடி: கொல்கத்தா நிறுவனத்தின் ரூ.483 கோடி சொத்துகள் முடக்கம்
x
தினத்தந்தி 15 May 2019 4:15 AM IST (Updated: 15 May 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

வங்கிக்கடன் மோசடி வழக்கில், கொல்கத்தா நிறுவனத்தின் ரூ.483 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டது, தயாள் குழுமம். இக்குழுமத்தை சேர்ந்த கே.எஸ்.எல். அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உள்பட 4 நிறுவனங்கள், பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி ஆகியவற்றிடம் இருந்து ரூ.524 கோடி கடன் பெற்றன.

ஆனால், அந்த கடன்தொகையை உரிய காரியத்துக்கு பயன்படுத்தாமல், போலி நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபட்டன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில், நாக்பூரில் கே.எஸ்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 2 லட்சத்து 70 ஆயிரம் சதுர அடி நிலத்தையும், ஒரு வணிக வளாகத்தையும் அமலாக்கத்துறை முடக்கியது. இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.483 கோடி ஆகும்.

Next Story