சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகும் காக்ரோச் சேலஞ்ச்


சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகும் காக்ரோச் சேலஞ்ச்
x
தினத்தந்தி 15 May 2019 7:13 PM IST (Updated: 15 May 2019 7:13 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் புதிய வகை சவால் ஒன்று டிரெண்ட் ஆகி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு முன் டென்(10) இயர்ஸ் சேலஞ்ச்மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டும் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். ஆனால் தற்போது காக்ரோச் சேலஞ்ச்  என்ற வித்தியாசமான சவால் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்பி புகைப்படம் எடுப்பதுதான், இந்த காக்ரோச் சேலஞ்ச் கரப்பான்பூச்சி என்றாலே பலருக்கும் பயம். அந்தப் பூச்சியை பார்த்தாலே, பலருக்கு அருவருப்பும், பயமும் தொற்றிக்கொள்ளும். அதை பார்த்ததும் பல அடி தூரம் ஓடி ஒளிந்து கொள்பவர்கள் உண்டு. அந்தப் பயத்தை, முறியடிக்கவே இந்தச் சவால் எனக் கருதி பலரும் இதை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு  வருகின்றனர்.

இந்த காக்ரோச் சேலஞ் சை முதன்முதலில் தொடங்கியவர் பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற இளைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story