அசாமில் பரபரப்பு நிறைந்த சாலையில் எறிகுண்டு வெடித்தது; 8 பேர் காயம்
அசாமில் கவுகாத்தி நகரில் வனவிலங்கு பூங்கா அருகே எறிகுண்டு வெடித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
கவுகாத்தி,
அசாமின் கவுகாத்தி நகரில் பரபரப்பு நிறைந்த ஆர்.ஜி. பருவா சாலையில் இன்றிரவு 7.30 மணியளவில் எறிகுண்டு ஒன்று திடீரென வெடித்தது. முதற்கட்ட தகவலின்படி, போலீசாரின் சோதனை சாவடியை இலக்காக கொண்டு இந்த குண்டு வீசப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். புகழ்பெற்ற பூங்கா, வனவிலங்கு பூங்கா மற்றும் வணிக வளாகம் என ஒன்றுக்கொன்று சில மீட்டர் தொலைவிலேயே அமைந்த பரபரப்பு நிறைந்த இந்த பகுதியில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story