ராஜஸ்தான் மருத்துவமனைகளில் பிரசவ அறைகளில் காயத்ரி மந்திரம் கட்டாயம்? மந்திரி மறுப்பு
ராஜஸ்தான் மருத்துவமனைகளில் பிரசவ அறைகளில் காயத்ரி மந்திரம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற தகவலுக்கு மந்திரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு உள்ள மருத்துவமனைகளில் உள்ள பிரசவ அறைகளில் காயத்ரி மந்திரம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என செய்திகள் வெளியாகின.
இதுபற்றி மாநில சுகாதார மந்திரி ரகு சர்மா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மருத்துவமனைகளில் பிரசவ அறைகளில் காயத்ரி மந்திரம் இசைக்கப்பட வேண்டும் என வெளியான செய்திகளில் உண்மையில்லை. இது வெறும் புரளி. இதற்கு முன்பும் இதே விவகாரம் எனது கவனத்திற்கு வந்தன.
இதுபோன்ற எந்தவொரு முடிவையும் அரசு எடுக்கவில்லை என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story