நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் - பிரக்யாசிங் தாகூர் பேட்டி
நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும் என்று பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
போபால்,
போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
இதனையடுத்து நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யா சிங் தாம் கூறிய கருத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story