தேசிய செய்திகள்

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டர் பலி + "||" + Doctor from Andhra Pradesh drowns in Goa while attempting to take a selfie at beach

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டர் பலி

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டர் பலி
கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டரை ராட்சத அலை இழுத்து சென்றது அதில் அவர் பலியானார்.
பனாஜ்

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற போது கடல் அலைகளில் சிக்கி உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணாவின் உடல் அவருடைய சொந்த ஊரான ஜக்கையா பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது.

கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ரம்யா கிருஷ்ணா நேற்று மாலை கடற்கரைக்கு சென்றார். கடலை பின்புலமாகக் கொண்டு அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் கடலுடன் போராடி மீட்டனர்.

அவருடைய உடல் இன்று காலை அவருடைய சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் அந்த ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் போலீஸ்காரரின் தபால் ஓட்டு நிராகரிப்பு
‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால், போலீஸ்காரரின் தபால் ஓட்டு நிராகரிக்கப்பட்டது.
2. தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் ஓடும் ரெயிலில் சிக்கி உயிரிழப்பு
அரியானாவில் தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் ஓடும் ரெயிலில் சிக்கி உயிரிழந்த பயங்கர சம்பவம் நேரிட்டுள்ளது.
3. வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது
கோவாவில் வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4. விமான நிலையம் முன் செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை: தாய்லாந்து அரசு
விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. கோவா அரசியலில் மீண்டும் பரபரப்பு : 2 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜ.க.வில் இணைந்தனர்
பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) இரண்டாக உடைந்தது.