தேசிய செய்திகள்

5 வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி + "||" + Modi shows up at his first press conference in five years

5 வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி

5 வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி
5 வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கேள்வி எதையும் எதிர்க்கொள்ளவில்லை.
2019 தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7–வது மற்றும் இறுதிக்கட்டமாக 50 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது. பிரசாரம் முடியவுள்ள நிலையில் பிரதமர் மோடி பா.ஜனதா தலைமையகத்தில் அமித்ஷாவுடன் செய்தியாளர்களிடம் பேசினார்.  

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சம்பவம் இதுவாகும். ஆனால் பத்திரிக்கையாளர்களின் கேள்விகள் எதையும் அவர் எதிர்க்கொள்ளவில்லை. அமித்ஷாவால் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது எனவே எந்தஒரு கேள்வியையும் எதிர்க்கொள்ளப்போவது கிடையாது, பா.ஜனதாவின் விதிகளின்படி ஒழுக்கம் பின்பற்றப்பட வேண்டும். அமித்ஷா உங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பார் எனக் கூறிவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது - அசோக் கெலாட்
காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
2. கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...!
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது.
3. மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: கனடா பிரதமர் வாழ்த்து
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. கட்சி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு : ‘வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ - பிரதமர் மோடி பேச்சு
பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் வெற்றியை நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என தொண்டர்களிடையே கூறினார்.
5. முழு பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2 தடவை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மோடி
முழு பெரும்பான்மையுடன், தொடர்ந்து 2–வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதலாவது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.