தேசிய செய்திகள்

என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் - பிரதமர் மோடி + "||" + PM Narendra Modi confident of majority

என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் - பிரதமர் மோடி

என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் -  பிரதமர் மோடி
என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைந்தது.  கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தை மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  மீண்டும் மோடி அரசுதான் வரும் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் காம்ருப் வரை ஒட்டுமொத்த நாடும் சொல்கிறது.

இந்த தேர்தலில், 300 தொகுதிகளுக்கு மேல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். என்னை மீண்டும் பிரதமர் ஆக்க முடிவு எடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 130 கோடி மக்களின் விருப்பத்தேர்வு, பா.ஜனதா கூட்டணிதான். இந்த ஞாயிற்றுக்கிழமை நீங்கள் ஓட்டுப்போட போகும்போது, புதிய சரித்திரம் எழுதப்போகிறீர்கள். 

கடந்த சில பத்தாண்டுகளுக்கு பிறகு, தொடர்ச்சியாக 2–வது தடவையாக பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். முந்தைய தேர்தல்களில் இருந்து இந்த தேர்தல் வேறுபட்டது. முன்பெல்லாம் இந்திய மக்கள் ஏதேனும் ஒரு கட்சிக்காக வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் நாட்டுக்காக ஓட்டளிக்கிறார்கள். புதிய இந்தியாவை உருவாக்க ஓட்டுபோடுகிறார்கள் எனக் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. சிறுபான்மையினரின் அச்சத்தை போக்குவோம் : புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தை தொடங்குகிறோம் - மோடி பேச்சு
சிறுபான்மையினரின் அச்சத்தை போக்குவோம். புதிய இந்தியாவை கட்டமைப்பதற்காக புதிய சக்தியுடன், புதிய பயணத்தை தொடங்குகிறோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
2. டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு
டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
3. பிரதமர் மோடியின் அரசு முறை வெளிநாட்டு பயணத்திட்டம் கசிந்தது
பிரதமர் மோடி, 2-வது முறையாக பதவியேற்கும் முன்னரே, அவரின் அரசு முறையிலான வெளிநாட்டு பயண திட்டம் வெளியாகியுள்ளது.
4. டெல்லியில் இன்று பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம்: மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்
பா.ஜனதா புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.
5. காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது - அசோக் கெலாட்
காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.