நேபாளத்தில் மேலும் 2 இந்திய வீரர்கள் பலி
நேபாளத்தில் மேலும் 2 இந்திய வீரர்கள் பலியாயினர்.
காட்மாண்டு,
நேபாளத்தில் கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் பிப்லாப் பால்தியா, குண்டால் கரார் ஆகிய 2 பேர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் அங்கு மேலும் 2 இந்திய வீரர்கள் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய ராணுவ வீரர் நாராயண் சிங், உலகின் 5-வது உயரமான சிகரமான மகாலுவில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தபோது, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
எவரெஸ்ட் சிகரத்தில் கேம்ப்-4 என்ற இடத்தில் மற்றொரு இந்திய வீரரான ரவி தக்கார் என்பவர் தனது கூடாரத்தில் இறந்து கிடந்தது நேற்று அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல்களை ‘7 சமிட் டிரெக்ஸ்’ அமைப்பின் தலைவர் மிங்மா ஷெர்பா வெளியிட்டுள்ளார்.

Related Tags :
Next Story