டெல்லியில் ராகுல் காந்தியுடன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு
டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
பாஜகவை வீழ்த்துவதற்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று சந்திரபாபு நாயுடு நேற்று கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து கருத்து தெரிவித்தார். பரம எதிரியான சந்திரசேகர ராவுடன் கூட கூட்டணி வைக்க தாம் தயார் என்று அறிவித்தார். முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி ஆகியோரை நேற்று சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசிய நிலையில் டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மே 23-ல் நடக்க உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
ராகுல்காந்தியுடனான சந்திப்புக்கு பிறகு உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவுடன் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story