மணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் -நாகா மக்கள் முன்னணி முடிவு + "||" + Naga People’s Front to withdraw support from BJP-led govt in Manipur
மணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் -நாகா மக்கள் முன்னணி முடிவு
மணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம்பால்,
நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழும் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னணி கூறி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜனதா, 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை, ஏ.ஐ.டி.சி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜனதாவை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.
நாகா மக்கள் முன்னணி, மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு ஆதரவு பிரசாரம் மேற்கொண்டதாக 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அளித்தது. அதேசமயம், 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைவர்களும் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற நாகா மக்கள் முன்னணி கூட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும் நாகா மக்கள் முன்னணி மாநில தலைவரான அவாங்போநெவ்மாய் கூறியுள்ளார்.