தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பானர்ஜி கடிதம்


தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பானர்ஜி கடிதம்
x
தினத்தந்தி 19 May 2019 8:32 AM IST (Updated: 19 May 2019 8:32 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தா,

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், மத்திய அரசின் தலையீடு இன்றி பாரபட்சம் இல்லாமல் நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். 

எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். மத்திய அரசின் தலையீடு காரணமாக மாநிலத்தில், சட்ட விரோதமான ஒரு தலைபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில நிர்வாகம், அதிகாரிகள், சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. வின் தலையீடு இல்லாமல் தேர்தல் நடைபெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயக நிறுவனங்களையும் தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.  

Next Story