தேசிய செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு + "||" + Exit polls are not exact polls, most have gone wrong since 1999: Vice-President Venkaiah Naidu

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் 1999-க்கு பிறகு பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
குண்டூர்,

மக்களவை தேர்தலுக்கான அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் நேற்றோடு நடந்து முடிந்தது, இதையடுத்து, நேற்று மாலை ஆங்கில தொலைக்காட்சிகள் பலவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும்பான்மையானவை, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று அறிவித்தன. 

இந்த நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி கூறியதாவது:- “

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல. முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான வாக்கு கணிப்புகள் தவறாகவே இருந்துள்ளன. ஜனநாயகம் வலுப்பட வேண்டுமெனில், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். 

அண்மைக் காலமாக, அரசியல் நாகரிகம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் பண்பாடு சிதைந்துள்ளது. ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, எதிர்ப்பாளர் மட்டுமே. இந்த அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் மறந்து விட்டனர். 

இதேபோல், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகளும், சட்டப்பேரவைகளில் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் கவலை அளிக்கிறது. அவர்கள், தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதில்லை. நாட்டுக்கும், மாநிலத்துக்கும் திறன் மிக்க தலைவரும், நிலையான அரசும் அவசியம். யாராக இருந்தாலும் சரி, இதுதான் அவசியம்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. மிருதங்கம் கலாசாரத்தின் ஒரு அங்கம்; நூல் வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
‘மிருதங்கம், கலாசாரத்தின் ஒரு அங்கம்’ என்று நூல் வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
2. மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும்; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை பெற மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
3. அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை - வெங்கையா நாயுடு
அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
4. காஷ்மீரில் இனி தீவிரவாதம் ஒழியும் என நம்புகிறேன்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
காஷ்மீர் மசோதாவை வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமையால் மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
5. அரசியல் சட்ட நகலை கிழிக்க முயன்ற 2 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றம் - வெங்கையா நாயுடு உத்தரவு
அரசியல்சட்ட நகலை கிழிக்க முயன்ற மக்கள் ஜனநாயக கட்சியின் 2 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.