ராஜஸ்தானில் 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி; மீட்கும் முயற்சி தீவிரம்


ராஜஸ்தானில் 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி; மீட்கும் முயற்சி தீவிரம்
x
தினத்தந்தி 20 May 2019 9:52 PM IST (Updated: 20 May 2019 9:52 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமியை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

ஜோத்பூர்,

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் வசித்து வரும் சிறுமி சீமா (வயது 4).  தனது வீடு அருகே இவர் விளையாடி கொண்டு இருந்துள்ளாள்.  திடீரென அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுமி தவறி விழுந்து விட்டாள்.

இந்த கிணறு 9 அங்குல அகலமும், 400 அடி ஆழமும் கொண்டது.  இதுபற்றிய தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மேலாண் படை உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுஉள்ளது.  சீமா உயிருடன் இருக்கிறாள் என்றும் பிராணவாயு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

Next Story