‘கேரளாவில் கள்ள ஓட்டு கலாசாரம்’ தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு கருத்து


‘கேரளாவில் கள்ள ஓட்டு கலாசாரம்’ தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு கருத்து
x
தினத்தந்தி 22 May 2019 4:00 AM IST (Updated: 22 May 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா, திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருவனந்தபுரம், 

டீகா ராம் மீனா அங்குள்ள கண்ணூர், காசர்கோடு நாடாளுமன்ற தொகுதிகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது குறித்து கூறுகையில், ‘‘ஒரு கள்ள ஓட்டு பதிவானால்கூட அது தவறானது. ஒரு தவறு நடக்கிறபோது, எத்தனை கள்ள ஓட்டுகள் என்பது முக்கியம் அல்ல. கேரளாவை பொறுத்தமட்டில் கள்ள ஓட்டு கலாசாரம் உள்ளது’’ என்றார்.

மறுவாக்குப்பதிவு என்பது தவறான கருத்தை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘‘ஆதாரங்களின் அடிப்படையில் நான் நடவடிக்கை எடுக்கிறேன். பாரபட்சமற்ற முறையில் முடிவுகள் மேற்கொள்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சியின் தாக்கத்தினாலும் முடிவுகள் எடுப்பதில்லை’’ என பதில் அளித்தார்.

தலைமை தேர்தல் அதிகாரியே, மாநிலத்தில் கள்ள ஓட்டு கலாசாரம் உள்ளது என கூறி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story