வட மாநிலங்களில் பா.ஜனதா 100 சதவீத வெற்றி
நாடாளுமன்ற தேர்தலில் வட மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி 100 சதவீத வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பல வட மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அந்தக் கட்சி, அந்தந்த மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் உள்ள அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றி 100 சதவீத வெற்றி பெற்றிருக்கிறது.
அந்த மாநிலங்களும், தொகுதிகளின் எண்ணிக்கையும் வருமாறு:–
குஜராத் – 26
ராஜஸ்தான் –25
அரியானா – 10
டெல்லி – 7
உத்தரகாண்ட் – 5
இமாசலபிரதேசம் – 4
அருணாசல பிரதேசம் –2
திரிபுரா – 2
சண்டிகார் – 1
டாமன் டையு – 1
இவற்றில் ராஜஸ்தானில் பாரதீய ஜனதா கட்சி 24 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
Related Tags :
Next Story