ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதாதளம் வெற்றி : நவீன் பட்நாயக் 5–வது முறையாக ஆட்சியை பிடித்தார்


ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதாதளம் வெற்றி : நவீன் பட்நாயக் 5–வது முறையாக ஆட்சியை பிடித்தார்
x
தினத்தந்தி 24 May 2019 4:41 AM IST (Updated: 24 May 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதாதளம் வெற்றி பெற்றது. நவீன் பட்நாயக் 5–வது முறையாக ஆட்சியைப் பிடித்தார்.

புவனேசுவரம், 

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் (வயது 72) தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சி ஆட்சி 2000–ம் ஆண்டில் இருந்து நடந்து வந்தது.

இங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் 147 இடங்களை கொண்ட சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. ஏப்ரல் 11, 18, 23, 29 என 4 கட்டங்களாக நடந்த தேர்தலில் மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.

ஆரம்பத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் பிஜூ ஜனதாதளம் கட்சி முன்னிலை பெறத்தொடங்கியது.

இறுதியில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இங்கு பிஜூ ஜனதாதளம் 2000, 2004, 2009, 2014, 2019 என தொடர்ந்து 5–வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.

முதல்–மந்திரி நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியிலும், பிஜேப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார்.

அவரது தலைமையில் புதிய மந்திரிசபை விரைவில் பதவி ஏற்கிறது.

மொத்த இடங்கள் – 147

தேர்தல் நடந்த இடங்கள்– 146

பிஜூ ஜனதாதளம் – 113

பாரதீய ஜனதா– 22

காங்கிரஸ் – 9

மற்றவை– 2


Next Story