உடல்நலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் டிரைவருக்காக ரம்ஜான் நோன்பு இருக்கும் இந்து வனத்துறை அதிகாரி


உடல்நலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் டிரைவருக்காக ரம்ஜான் நோன்பு இருக்கும் இந்து வனத்துறை அதிகாரி
x
தினத்தந்தி 1 Jun 2019 8:29 AM IST (Updated: 1 Jun 2019 8:29 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் டிரைவருக்காக, இந்து வனத்துறை அதிகாரி ரம்ஜான் நோன்பு இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை, 

புல்தானாவில் வனத்துறை அதிகாரியாக இருப்பவர் சஞ்சய் மாலி. இவரிடம் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஜாபர் என்பவர் டிரைவராக உள்ளார். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜாபருக்காக இந்துவான சஞ்சய் மாலி ரம்ஜான் நோன்பு இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சஞ்சய் மாலி கூறியதாவது:-

கடந்த மே 6-ந் தேதி ரம்ஜான் நோன்பு குறித்து ஜாபரிடம் கேட்டேன். அப்போது உடல்நல பாதிப்பு காரணமாக தன்னால் நோன்பு இருக்க முடியவில்லை என கூறினார். எனவே அவருக்காக நான் நோன்பு இருப்பதாக ஜாபரிடம் கூறினேன். அதன்படி நான் 6-ந்தேதி முதல் நோன்பு இருந்து வருகிறேன். எல்லா மதங்களும் நன்மையை மட்டுமே நமக்கு கற்று கொடுக்கிறது. நாம் கண்டிப்பாக மத நல்லிணக்கத்தை பரப்பவேண்டும். மனிதநேயமே முக்கியம். மதம் இரண்டாம் பட்சம் தான். நோன்பு இருப்பதால் நன்றாக உணருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story