எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
மக்களவையில் போதுமான எண்ணிக்கை இல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீண்டும் பதவி ஏற்று இருக்கிறது. மந்திரிகளுக்கான இலாகாக்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் புதிய மந்திரிசபையின் முதல் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டம் முடிந்ததும், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில்,
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 26-ந்தேதி வரை நடைபெறும். மொத்தம் 30 நாட்கள் சபை கூடும். 17 மற்றும் 18-ந்தேதிகளில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்பார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர், உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்றார்.
இந்நிலையில் காங். செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்களவையில் போதுமான எண்ணிக்கை இல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற தேவையான 54 உறுப்பினர்கள் இல்லாததால் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது என்றார்.
Related Tags :
Next Story