எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது -மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால்


எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது -மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால்
x
தினத்தந்தி 1 Jun 2019 9:05 PM IST (Updated: 1 Jun 2019 9:05 PM IST)
t-max-icont-min-icon

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும், ஹிந்தியை கட்டாய பாடமாக்க, பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது. கஸ்தூரி ரங்கன் குழு வரைவு அறிக்கையை மட்டுமே சமர்ப்பித்துள்ளது. இது கொள்கை முடிவு அல்ல.

வரைவு அறிக்கையின் மீது பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படும். வரைவு அறிக்கை கொள்கை முடிவாக அமல்படுத்தப்படும் என தவறாக  புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story