நேபாளத்துக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு


நேபாளத்துக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு
x
தினத்தந்தி 2 Jun 2019 3:31 AM IST (Updated: 2 Jun 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

நேபாளத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு,

பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி கலந்துகொண்டார். மறுநாள் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார். இதுதொடர்பாக நேபாள வெளியுறவு அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நேபாள பிரதமர் சர்மா ஒளி வெள்ளிக்கிழமை நாடு திரும்பினார். அவர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மோடியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். இரு பிரதமர்களும் தங்கள் தலைமையில் இருநாட்டு உறவுகள் மேம்பட்டு இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story