பீகார் அமைச்சரவை விஸ்தரிப்பு, பா.ஜனதாவிற்கு இடம் வழங்கப்படவில்லை
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் அங்கம் வகிக்கிறது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜனதா தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக உள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ஒரு கேபினட் மந்திரி பதவி தருவதாக பா.ஜனதா கூறியது. ஆனால் இதனை அந்த கட்சி ஏற்கவில்லை. அதோடு ஒதுக்குவதாக கூறப்பட்ட துறையிலும் திருப்தியில்லை. அதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அரசில் பங்கேற்கவில்லை.
“நாங்கள் மத்திய அரசில் இணையவில்லை. இது தான் எங்கள் முடிவு” என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலாளர் வர்மா கூறினார்.
முந்தைய மோடி அரசிலும் இந்த கட்சி இணையவில்லை. 2017-ல் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது என்றாலும், இந்த அரசிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் பீகார் அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பீகார் அமைச்சரவையில் புதியதாக 8 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள். பா.ஜனதாவினருக்கு பொறுப்பு கொடுக்கப்படவில்லை. பா.ஜனதா ஒரு அமைச்சரவை சீட் மட்டும் மத்தியில் கொடுக்க முன்வந்ததை ஐக்கிய ஜனதா தளம் ஏற்கவில்லை. இந்நிலையில் இந்த அமைச்சரவை விஸ்தரிப்பு நடந்துள்ளது.
Related Tags :
Next Story