நந்தா தேவி சிகரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 4 மலையேற்ற வீரர்கள் மீட்பு; 8 பேர் மாயம்


நந்தா தேவி சிகரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 4 மலையேற்ற வீரர்கள் மீட்பு; 8 பேர் மாயம்
x
தினத்தந்தி 2 Jun 2019 5:57 PM IST (Updated: 2 Jun 2019 5:57 PM IST)
t-max-icont-min-icon

நந்தா தேவி சிகரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 4 மலையேற்ற வீரர்கள் மீகப்பட்டுள்ளனர்.


உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள 7434 மீட்டர் உயர நந்தா தேவி சிகரத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் சென்றனர். அவர்களுடன் பயிற்சி நிறுவன அதிகாரி ஒருவரும் வழிகாட்டியாக சென்றார். கடந்த 13-ந்தேதி முன்சியாரி பகுதியில் இருந்து மலை ஏற்றம் சென்ற அவர்கள் நேற்று முன்தினம் முகாமிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லை. 

இதையடுத்து அவர்கள் மாயமானதாக பித்தோரகார்க் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர்களை தேடுவதற்கு மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பனிச்சரிவு ஏற்பட்டுள்ள மலைப் பகுதியில் இருந்து 4 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். அவர்கள் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story