டெல்லி விமான நிலையத்தில் செயற்கைகோள் போன் பறிமுதல்
டெல்லி விமான நிலையத்தில் பிரான்சை சேர்ந்தவரிடம் இருந்து செயற்கைகோள் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
இந்தியாவில் செயற்கைகோள் செல்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து பிரான்ஸ் செல்வதற்காக பிரான்சை சேர்ந்த பியரி லாரண்ட் பாய்ல்ஹோல் என்பவர் விமான நிலையத்துக்கு வந்தார். அவரது உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது, அவரது கைப்பையில் இரிடியத்தால் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த போனை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர் லாரண்டை டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story