இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் மாயம்


இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் மாயம்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:00 PM IST (Updated: 3 Jun 2019 4:00 PM IST)
t-max-icont-min-icon

அசாமிலிருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் மாயமானது.


இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் - 32 விமானப்படை பயணிகள் விமானம் அசாமின் ஜோர்காட்டிலிருந்து 12:24 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 5 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் ரேடார் இணைப்பில் இருந்து விலகியுள்ளது. மதியம் 1 மணியிலிருந்து விமானம் தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து விமானப்படை விமானங்கள் விமானத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளது. சுகோய் 30, சி 130 விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் இதே ரக விமானம் புறப்பட்டு சென்ற போது மாயமானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story